Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாக்யராஜ் திடீர் நீக்கம்….? நடிகர் சங்கத்தின் அதிரடி முடிவு….. வெளியான தகவல்‌….!!!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கு நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டுள்ள சூழலில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும் தேர்தல் குறித்து பொய்யான உண்மைக்கு புறமான கருத்துக்களை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்து வருகின்றீர்கள்.

இந்த காழ்புணர்ச்சி காரணமாகவும் ஒரு சில உறுப்பினர்களின் தூண்டுதல்களின் பெயரிலும் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்திருக்கின்றீர்கள். மேலும் சட்ட விதிகளுக்கு புறம்பாக இதை செய்திருக்கின்றீர்கள். இந்த நிலையில் சங்க உறுப்பினர்கள் ஒரு சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார். இது பற்றிய சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களை சங்க உறுப்பினர்கள் பதவியில் இருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

மேலும் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் விளக்கம் அளிக்காத பட்சத்தில் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுகின்றோம் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக வந்த நிர்வாகம் மற்றும் தேர்தல் பற்றி பொய்யான தகவலை பரப்பி வந்த காரணத்திற்காக இயக்குனர் கே பாக்யராஜ் மற்றும் எல் உதயா ஆகிய இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது மேலும் இது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |