Categories
உலக செய்திகள்

“இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப கூடாது”… பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை…!!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உரையை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தான் உலக அமைப்பு தடை விதித்திருக்கின்றது. இஸ்லாமாபாத்தில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது பேசிய  இம்ரான் கான் இஸ்லாமாபாத்  காவல்துறை அதிகாரி மற்றும் பெண் மாஜிஸ்திரேட் மிரட்டியதற்காக பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ- இன்சாப் தலைவர் இம்ரான் கானின் நேரடி உரைகளை ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்கு முறையானையம் தடை விதித்திருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர் ஷாபாஷ் கில்மீது அந்த நாட்டின் ஊடக அதிகார மையத்தால் அவர் பேசியதும் மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் தேச துரோகம் என குற்றச்சாட்டபட்டு கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரானின் பி டி ஐ கட்சி தலைவர் ஷாபாஸ் கில்லுக்கு ஆதரவாக இஸ்லாமாபாத்தில் பி டி ஐ கட்சி பேரணியை நடத்தியுள்ளது. மேலும் போலீஸ் காவலில் கில்  கொடூரமான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பவும் மக்களை பயமுறுத்தவும் கில் பிடிபட்டு சித்திரவதை செய்யப்பட்டார் என இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது பற்றி இம்ரானின் முறையில் அவர் பேசும் போது, கில்லை சித்திரவதை செய்ததற்கான இஸ்லாமாபாத்தின் போலீஸ் ஐ.ஜி துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் பெண் மாஜிஸ்திரேட் போன்றோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வோம். ஐஜியை வித்து வைக்க மாட்டோம் எனவும் இம்ரான்கான் உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட உரையை மட்டுமே ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்படும் என பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இதன் மூலமாக அனைத்து செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களிலும் இம்ரான் கானின் நேரடி உரையை ஒளிபரப்பு உடனடியாக தடை விதிக்கப்பட்டு இருப்பதாக ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |