பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதனையடுத்து பாகிஸ்தானில் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவி ஏற்றார். அதனைதொடர்ந்து தனது அரசை வெளிநாட்டு சக்தி சரி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனே பொது தேர்தலை நடத்த வேண்டும் என்று இம்ரான் வலியுறுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறனர்.
அதன்படி இன்று இஸ்லாம்பாத்தில் அணிவகுப்பு மைதானத்தில் பிரம்மாண்ட பேரணி பொதுக்கூட்டம் நடத்த இம்ரான்கான் திட்டமிட்டுள்ளார். இதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று இஸ்லாம் கட்சி மனுதாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், தங்களது பேரணி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு, இஸ்லாம்பாத் போலீஸ் துணை கமிஷனருக்கும் விண்ணப்பித்தோம். ஆனால் அவர் அனுமதி தராமல் தாமதம் செய்வதாகவும் கூறி அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்நிலையில் இம்ரானின் கட்சியினர் இன்று பேரணி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.