Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் அரசு: நம்பிக்கையில்லா தீர்மானம்….. வரும் 28 ஆம் தேதி ஓட்டெடுப்பு…..!!!!!

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக், அவாமி தேசிய கட்சி, ஜாமியத் உல்மா இ இஸ்லாம் கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளது. அதன்படி இம்ரான்கான்அரசு மீது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு நோட்டீஸ் அளித்துஉள்ளது. இம்ரான்கான் அரசை சரித்து விடுவதில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கிறது. இதற்கிடையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது 28ஆம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இது இம்ரான்கான் அரசுக்கு அக்னிபரீட்சையாக இருக்கிறது. இதற்கு ஒருநாள் முன்பாக 27-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை இம்ரான் கான் நடத்த இருக்கிறார்.
இந்நிலையில் இம்ரான்கான் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “நன்மைக்கு ஆதரவாகவும், தீமைக்கு எதிராகவும் முஸ்லிம்கள் நிற்க வேண்டும்” என்று அவர் குரானை மேற்கோள்காட்டி கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல்  27ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடும்போது “நான் தீயவர்களுடன் இல்லை, அதற்கு எதிராக இருக்கிறோம் என்ற செய்தியை விடுப்பதற்கு 27ம் தேதி மக்கள் என்னுடன் சேர வேண்டும். பாகிஸ்தான் மற்றும் ஜனநாயகத்தை சேதப்படுத்தும் முயற்சியில் இனி யாரும் குதிரை பேரத்தில் ஈடுபட முடியாது என்பதை நாடு அறியவேண்டும்” என்று கூறியுள்ளார். இந்நிலையில், இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் முன் மொழிந்துள்ள தீர்மானம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்நாட்டு நாடாளுமன்ற மக்களவை 28ஆம் தேதி மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று காலை 11.30 மணியளவில் கூடியபோது, நடப்பு மக்களவையின் உறுப்பினர் ஒருவர் மறைவுக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவை அலுவல்களை வருகிற 28ஆம் தேதி மாலை 4 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அசாத் கெய்சர் தெரிவித்தார். பிபிசியின் ஷெஹ்சாத் மாலிக் கூற்று அடிப்படையில், இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் 159 எதிர்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்களில் சில பேர் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சபாநாயகரின் அறிவிப்பு வெளிவந்தவுடன் குரல் எழுப்பினர். இதனிடையில் எதிர்க்கட்சித் தலைவர் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக பேச முற்பட்ட போதிலும் அதனை சபாநாயகர் நிராகரித்தார்.

Categories

Tech |