எலுமிச்சைச் சாறு குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்கலாம்.
இயற்கை மருத்துவத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் எலுமிச்சைபழ சாறு குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.பெரும்பாலான மக்கள் சமையல் உணவுகளுக்கு சிட்ரஸ் சுவையை கொடுக்க எலுமிச்சை பழத்தை உபயோகப்படுத்துகின்றனர். தினமும் சமையலில் எலுமிச்சையின் பங்கு இருந்தால் நல்லது.அதில் தண்ணீரும் , உப்பும் கலந்து குடித்தால் ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வு காண முடியும்.
சூடான தேநீர் ஒரு டேபிள் ஸ்பூனுடன், எலுமிச்சை சாறு கலந்து குடித்துவர தலைவலி குறையும். இயற்கை முறையில் கருவளத்தை ஆண் பெண் இருவரிடமும் ஊக்குவிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நரம்பு மண்டலத்தை ஊக்குவித்து இரவு நல்ல தூக்கம் உண்டாகும்.வைட்டமின் சி சத்து குறைபாட்டை குறைக்கவும் உடலில் வலி எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது.
மன அழுத்தம்,நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கி சீரான சுவாசம் தருகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தோல் சுருக்கங்களை போக்கும். எலுமிச்சைசாற்றுடன் உப்பு போட்டு பருகுவதால் நாவிலுள்ள எச்சில் சுரப்பு தூண்டப்படுகிறது. இதனால் செரிமானம் சீராகி, அஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கும். எலுமிச்சையில் தேன் சேர்த்து குடித்தால் உடல் எடை குறையும்.
எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவும்.நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கலோரிகளின் அளவை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவும். எலுமிச்சையில் பொட்டாசியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. மேலும் குமட்டல், மயக்கம் குறையும். மலச்சிக்கல் மாறுவதற்கு சூடான நீரில் எலுமிச்சைசாறு கலந்து குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
எலும்பிச்சை சாறு, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. பாதி எலுமிச்சை சாறு எடுத்து,அதில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரை கலந்து விரல் நகங்களை 5 நிமிடம் ஊறவிடுங்கள். பின்னர் எலுமிச்சை தோலை எடுத்து விரல் நகத்தில் மேலும் கீழுமாக தேய்த்து விடவும் தொடர்ந்து இவ்வாறு செய்து வர நகம் பளபளப்பாக மாறும்.