Categories
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு… தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு…!!!

இமாச்சலப் பிரதேசத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்றது. இதனால் அதிக அளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குல்லு மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோசா என்ற இடத்தில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. கற்களும், பாறைகளும் சாலைகளில் குவிந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பொக்லைன் இயந்திரம் மூலம் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலாத்தலங்கள் அதிகளவில் இருப்பதால் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதுபோன்ற மலைச்சரிவு, நிலச்சரிவு போன்ற காரணங்களினால் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தத்துடன் திரும்புகின்றனர். இந்த ஆண்டு மட்டும் நிலச்சரிவு காரணமாக 246 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |