Categories
தேசிய செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெறும் : இந்திய தேர்தல் ஆணையம்..!!

இமாச்சலபிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று பிற்பகல் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணைய ராஜிவ் குமார் இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். அதன்படி, இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 17ஆம் தேதி வேட்புமனு  தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 25, பரிசீலனை அக்டோபர் 27 ஆம் தேதி, வேட்புமனு  திரும்ப பெற அக்டோபர் 29ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 10ஆம் தேதி அறிவிக்கப்படும்.

நாடு முழுவதும் 1.82 கோடி வாக்காளர்கள் 80 வயதை கடந்தவர்கள், 2.5 லட்சம் வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று ஓட்டு பெற்று வரும் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும்.  2023 ஜனவரி 8ஆம் தேதி இமாச்சல பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளில் 20 தொகுதிகள் தனித் தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 55.7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |