இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது .சில மணி நேரத்தில் அதிக மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.அதிலும் குறிப்பாக காங்ரா, மாண்டி, ஹமிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. ஆறுகள், கால்வாய்கள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாண்டி, சம்பா, காங்ரா மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும், நிலச்சரிவில் சிக்கியுமாக 22 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories
இமாசலபிரதேசத்தில் கனமழை…. நிலச்சரிவால் 22 பேர் பலியான சோகம்….. அதிர்ச்சி…..!!!!
