Categories
சினிமா

இமயமலையில் ஆபத்தான வளைவில்…. அசால்டாக பைக் ஓட்டும் அஜித்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தனது நடிப்பையும் தாண்டி மற்ற நேரங்களில் பைக் ஓட்டுவது, பைக்கில் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் தனியாக பயணிப்பது,கார் ரேஸ் மற்றும் துப்பாக்கிச் சூடும் போட்டிகளில் கலந்து கொள்வது என பல விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சினிமாவை தாண்டி தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை தவறாமல் செய்து விடுவார்.

இந்நிலையில் சில நண்பர்களுடன் இமயமலை பகுதியில் அவர் பைக் பயணம் சென்றுள்ளார்.ஏற்கனவே சில புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இமயமலைக்கு செல்லும் வழியில் ஆபத்தான வளைவுகளில் அஜித் பைக்கில் செல்லும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகிறார்கள்.

Categories

Tech |