தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில் அவரது அண்ணனுக்கு விவாகரத்து நடக்க இருக்கிறது. ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி முஸ்கான் நான்சிக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இதனால் பிரிந்து இருந்த அவர்கள் தற்போது விவாகரத்து முடிவை எடுத்திருக்கிறார்கள்