Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்ப என்னுடைய மகன் சந்தோஷமாக இருக்கின்றான்”…. சமந்தாவின் மாஜி மாமனார் ஓபன் டாக்…!!!!!

இப்பொழுது என்னுடைய மகன் சந்தோஷமாக இருப்பதாக நாகார்ஜுனா கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தில் நடித்திருக்கும் நாகார்ஜுனா அண்மையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நாக சைத்தன்யா-சமந்தா பிரிவு துரதிஷ்டமான ஒன்று. அதைப் பற்றி நாம் தொடர்ந்து கவலைப்பட வேண்டாம். அது முடிந்துவிட்ட ஒன்று. அது எங்களது வாழ்க்கையை விட்டு வெளியேறிவிட்டது. ஒரு நாள் அது மற்றவர்களின் வாழ்க்கையில் இருந்தும் வெளியேறும். சமந்தாவை பிரிந்த போது நாக சைத்தன்யாவுடன் எங்களால் அதிக நேரம் இருக்க முடியவில்லை. ஆனால் அவர் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றார். என் முதல் சந்தோஷம் என் மகன் சந்தோசம் தான். நான் எதிர்பார்ப்பது அது மட்டுமே. அது எனக்கு போதும். நாகா சைத்தன்யாவுக்கு ஏற்பட்ட அனுபவம் துரதிஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |