தமிழக முதல்வர் ஸ்டாலின், காது கேளாதவர்களுக்கு கருவிகள் வழங்க இந்த ஆண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். உலக காது கேளாதோர் வார நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய அவர், திமுக அரசு மாற்றுத்திறனாளிக்கு தேவையானவற்றை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் காது கேளாத 7 வயது உட்பட 10 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார். குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய 3.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் சென்னை கிருஷ்ணகிரி மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.98.9 லட்சம் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் பேசிய முதல்வர், மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலமாக 10,10,000 க்கு மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஒவ்வொரு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி ஸ்டாலின் பிறந்த நாள் அண்ணா மேம்பாலத்தின் கீழ் லிட்டில் பிளவர் என்ற பள்ளிக்கு சென்று பிள்ளைகளுடன் என் பிறந்த நாளை கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார். அரசே தேடி மக்கள் சென்ற காலம் போய் மக்களை தேடி அரசு என்ற காலம் வந்து கொண்டு இருக்கிறது என்று அவர் அறிவித்தார்.