காயமடைந்தவர்களை நேரில் சென்று பிரதமர் ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த காலத்தில் கடந்த 30-ஆம் தேதி மாலை 500-க்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் அருந்து விழுந்தது. இதனையடுத்து பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 170 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் சிலர் ஆற்றில் விழுந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேர்தல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பால விபத்து நடந்த பகுதியில் பிரதமர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை அடுத்து நேர்வி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மூத்த அதிகாரிகளுடன் பாலம் விபத்து குறித்து உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.