சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அந்நாட்டிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டமான சூழல் உருவாகி வருவதால் சீனாவின் விசா வைத்திருக்கும் இந்தியர்களும் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விசா அல்லது சீன குடியிருப்பு அனுமதி அட்டை பெற்றவர்கள் தற்காலிகமாக நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக இந்தியாவில் அமைந்துள்ள சீன தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சுகாதார நற்சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் தூதரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையில் தூதர்கள், சி நுழைவு இசைவு உள்ளவர்கள் மற்றும் சேவை செய்ய விரும்புபவர்கள் போன்றவர்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நவம்பர் மூன்றாம் தேதிக்கு பிறகு நுழைவு இசைவு கொடுத்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.