தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியானது தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் டெஸ்ட் போட்டிகள் 4, ஒருநாள் போட்டிகள் 3 மற்றும் டி20 போட்டிகள் 5 உள்ளிட்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. மேலும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஒரு வருடமாக மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் நடக்கவிருக்கும் முதல் சர்வதேச போட்டியான இதனை காண்பதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவே அவர்களின் பாதுகாப்பை கருதி இந்த போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கபடமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சென்னையில் நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடர்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேலும் பிசிசிஐ தான் இத்தொடரின் பிற போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பதை குறித்து தீர்மானிக்கும். ஆனால் சென்னையில் நடைபெறும் 2 போட்டிகளிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எனவே ரசிகர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களின் போட்டிகளை தொலைக்காட்சிகளில் கண்டு களிக்கவும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் நடக்கவிருக்கும் முதல் சர்வதேச போட்டியை கண்டு கழிப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இந்த அறிவிப்பானது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.