நயன் கூறியதற்கு விக்னேஷ் சிவன் சரியென கூறியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த தம்பதிக்கு பல்வேறு நடிகர்களும் மற்றும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
திருமணத்திற்கு முன்பாகவே நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி விட்டதால் நயன்தாரா தற்போதைக்கு தேனிலவு செல்ல மாட்டார் என கூறிய நிலையில் சிறிய இடைவெளி விட்டுவிட்டு தேன் நிலவுக்கு சென்று விட்டு நாடு திரும்பி தற்பொழுது அட்லீ இயக்கத்தில் நடித்த வருகின்றார். விக்னேஷ் சிவனும் அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைப்படத்தில் தனது மனைவியை ஹீரோயினாக நடிக்க வைக்கின்றார். கை நிறைய திரைப்படங்கள் இருப்பதால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என நயன்தாரா கூறியதற்கு விக்னேஷ் சிவன், உன் விருப்பம் தான் என் விருப்பம் தங்கமே என கூறியுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.