மாரத்தானில் 1000 கிலோ மீட்டர் தூரம் ஓடி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய கடுமையான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் தேசிய பிறர் மீது அக்கறை காட்டும் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அனைவரும் பிறர் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஆயிரம் கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை தொடங்கினார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
அதாவது 1000 கிலோ மீட்டர் தூரத்தை 100 நாட்களில் கடக்க வேண்டும் என்பது இலக்கு. இதனைத் தொடர்ந்து அவர் ஓட்டப்பந்தயத்தை தொடங்கிய 92 ஆவது நாளில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்தார். அதாவது 100 நாட்களில் கடக்க வேண்டிய தூரத்தை வெறும் 92 நாட்களில் கடந்து மாபெரும் சாதனையை படைத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.