2022ல் வரப்போகும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை காங்கிரஸ் தற்போதே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2022 ஆம் வருடம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை காங்கிரஸ் இப்போதே துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இக்கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தியின் அரசியல் நிகழ்வுகளை தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சுமார் 10 லட்சம் காலண்டர்கள் மாநிலம் முழுவதும் இருக்கும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து உத்திரபிரதேச ஊடகப்பிரிவு பொறுப்பாளரான லல்லன் குமார் கூறுகையில், இந்த காலண்டர்கள் மக்கள்தொகையை பொறுத்து வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.