Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி மட்டும் யாரும் படம் எடுக்காதீங்க!…. சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஸ்பீச்….!!!!

எஸ்.பி.ராஜ்குமார் டிரைக்டில் நடன வடிவமைப்பாளரான தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “லோக்கல் சரக்கு”. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினரான இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார், தினேஷ், உபாஸ்னா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ஜீவா, சென்ட்ராயன் போன்றோரும், சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிலையில் கனல் கண்ணன் பேசியதாவது “புதியதாக படம் எடுப்போர் வெற்றியடைந்து கொண்டிருக்கும் துறைதான் இது.

நல்ல திரைப்படங்கள் எப்போதும் வரவேற்கப்படும். லோக்கல் சரக்கு திரைப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கி இருக்கிறார். இவர் இயக்கியிருக்கும் இந்த படம் வெற்றி அடைய வேண்டும். இதையடுத்து முக்கியமான விஷயம் என்னவெனில் மதங்களை பற்றி பேசுவது தற்போது ஸ்டைல் ஆகிவிட்டது. அது திரையுலகிற்கு தேவை இல்லாதது. எனவே யாரும் மதம் பற்றி தவறாக சித்தரித்து திரைப்படங்களை எடுக்காதீர்கள். எனினும் யாராவது மதங்களை தவறாக படமாக்கினால், அதில் பாதிக்கப்பட்டவன் அங்கங்கே வாழ்ந்து கொண்டுதான் இருப்பான்” என்று பேசினார்.

Categories

Tech |