Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணாதிங்க…. 8 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்…. கடிதம் எழுதிய முதல்வர்….!!

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் பழனிசாமி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவலினாலும் காற்று மாசுபடுவதை தடுப்பதற்காகவும் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மாநில முதல்வர்களுக்கு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். அதில் 90 சதவீத பட்டாசு உற்பத்தி தமிழகத்தில் நடக்கிறது. இதன் மூலம் 8 லட்சம் தொழிலாளர்கள் பயனடைகின்றனர். பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்தால் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் என பலரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |