Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. ஆலோசனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ்  சூப்பிரண்டு  ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, விஜயகுமார், இந்து முன்னணியினர், விநாயகர் சிலை வைப்பவர்கள், செய்பவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் துணைபோலீஸ்  சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறியதாவது. நமது மாவட்டதில் உள்ள கண்ணமங்கலம், சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வருகின்ற 31-ஆம் தேதி  விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.

இதில் காவல் துறைக்கு தெரியாமல் யாரும் சிலைகள் வைக்க கூடாது, மேலும் சிலைகள் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க வேண்டும். இந்நிலையில் அனைவரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் வராமல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார்.

Categories

Tech |