அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே இந்தியாவில் ஒரு லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக அளவில் கடந்த பத்து நாட்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிக அளவிலான கொரோனா இழப்புகள் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 35,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே ஒரு லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.