Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி செஞ்சா உங்களுக்கு வராது…. சீல் வைக்கப்பட்ட பகுதி… தீவிர கண்காணிப்பு பணி…!!

சென்னையில் ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அந்தப் பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன் பின் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து சென்னையிலுள்ள ராயபுரம் ஐந்தாவது மண்டலத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு என்ற பகுதியில் ரத்தின தெருவில் அடுக்கு மாடியில் வசித்து வருகின்ற மக்கள் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று பாதித்தவர்கள் நம்மாழ்வார் தெருவில் 8 பேரும், கொண்டல் தெருவில் 8 பேரும் மற்றும் கிருஷ்ணப்பா குளம் தெருவில் 6 பேரும் என ஒரே பகுதியில் உள்ள நான்கு தெருக்களில் மொத்தம் 34 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலர் மாப்பிள்ளை துரை  மற்றும் சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் ஆகியோர் அந்த நான்கு தெருக்களையும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து இரும்பு வேலியால் அடைத்து அந்தப் பகுதிகளுக்கு  சீல் வைத்துள்ளனர். மேலும் சீல் செய்யப்பட்ட பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் கிருமி நாசினி தெளித்து வருவதோடு, பொதுமக்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை நன்றாக கழுவுவது போன்ற பேனர்களை வைத்துள்ளனர்.

Categories

Tech |