பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் புஷ்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் பகுதியில் அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக விளங்கும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள மாரியம்மன் சிலை புத்துமன்னாள் உருவானது. இதனால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிராம மக்கள் சார்பில் புஷ்பாபிஷேக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று புஷ்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் அனைவரும் பூக்கூடைகள், பூத்தட்டுகள் ஆகியவற்றை சிவன் கோவிலில் இருந்து எடுத்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
அதன்பின்னர் மாரியம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், வழிபாட்டு குழு செயலாளர் சாவித்திரி மகாலிங்கம், சிவராத்திரி கமிட்டி தலைவர் சரவணன் வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்துள்ளனர்.