பாகிஸ்தானில் சயத் பாசித் அலி என்பவர் youtube ஒன்றை நடத்தி வருகிறார். ஏராளமான நேர்காணல்களை தனது youtube தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவ்வகையில் சமீபத்தில் 70 வயது முதியவர் 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
லாகூர் நகரை சேர்ந்தவர் லியாகத் அலி (70), அதே நகரை சேர்ந்தவர் சுமைலா அலி(19) இருவரும் காதல் வயப்பட்டு சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர். இளம் பெண் பாடும் பாடலை கேட்டு காதலில் விழுந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அதே சமயம் காதல் வயது பார்ப்பதில்லை என்று இளம் பெண் கூறுகிறார். இந்த திருமண நிகழ்வை பார்த்து 90 கிட்ஸ் செம கடுப்பாகி கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.