ஒருவர் தன் மனைவியின் இறந்த உடலுடன் 21 வருடம் வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். தாய்லாந்து நாட்டில் சார்ன் ஜன்வார்ட்சகல் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ மருத்துவ உதவியாளராக இருந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவருடைய மனைவி கடந்த 21 வருடங்களாக முன்பாக இறந்துவிட்டார். ஆனால் சார்ன் தன்னுடைய மனைவியின் சவத்தை அடக்கம் செய்யாமல் சவப்பெட்டியில் வைத்து 21 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இந்த சம்பவம் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு கூட 21 வருடங்கள் தெரியாமல் இருந்துள்ளது. இந்த உண்மை திடீரென அக்கம் பக்கத்தினருக்கு தெரியவரவே அவர்கள் ஒரு அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் 72 வயதான சார்னுக்கு உதவி செய்துள்ளனர். அதன்பிறகு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி அறக்கட்டளை நிர்வாகிகள் சார்னின் மனைவியின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இந்த முதியவர் தன்னுடைய மனைவியின் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக உடலை அடக்கம் செய்யாமல் தன்னுடனே 21 வருடங்கள் வைத்துள்ளார்.