Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இப்படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமோ…. பட்டுத்துணியில் வாசகம்…. தலைமை தாங்கிய காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்….!!

காஞ்சிபுரத்தில் பட்டுத்துணியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள் பொறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடவடிக்கைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க பறக்கும் படையினர்களை நியமித்தது. இந்நிலையில் 100 சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி பல வகையான வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நெசவாளர்கள் மூலம் பட்டுத்துணியில்,” நமது இலக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு” என்று வடிவமைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதனை மாவட்ட அலுவலகத்தில் வைத்து கலெக்டர் மகேஸ்வரியும் தேர்தல் ஆய்வாளரும் மக்களின் பார்வைக்கு தெரியப்படுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் சில முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

Categories

Tech |