Categories
உலக செய்திகள்

இப்படியும் ஒரு பெண்ணா..? ஆடம்பர வாழ்க்கை வேண்டாம்…. விவாகரத்து கொடுங்க…!!

ஆடம்பர வாழ்க்கை பிடிக்காததால் கணவனிடமிருந்து விவாகரத்து கேட்ட பெண்ணின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சிறுவயது முதலே ஆடம்பரத்தை வெறுத்து எளிமையாக வாழ்ந்து வந்துள்ளார்.  கோடீஸ்வரராக இருந்தாலும் சக மாணவிகளுடன் பள்ளிக்கு செல்லும் போது கார்களை தவிர்த்து சைக்கிளில் சென்றுள்ளார்.  எளிமையாக வளர்ந்த இவருக்கு 2009 ஆம் ஆண்டு கொழும்புவில் உள்ள கோடீஸ்வர இளைஞர் ஒருவரை பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு கணவருடன் வசித்து வந்த பெண்ணிற்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்கவில்லை.

தனியாக இருப்பதாக உணர்ந்த அந்த பெண் தனது கணவரிடம் வவுனியாவிற்கு திரும்பிச் சென்று பண்ணை வீட்டில் எளிமையான வாழ்க்கையை வாழலாம் என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவரது கணவர் அதனை  காது கொடுத்து கேட்கவில்லை தன் வேலையை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தருமாறு விண்ணப்பித்துள்ளார்.

Categories

Tech |