குஜராத் பால விபத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திடீரென அறுந்து விழுந்தது. இதில் 135-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பாலத்தை சீரமைக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஓரேவா குழும நிறுவனம் பாலத்தை ஒட்டுமொத்தமாக சீரமைத்து இருந்தால், அதற்கான செலவு 2 கோடி ஆயிருக்கும். ஆனால் பாலத்தை சீரமைக்காமல் வெறும் தொடைத்து பவுடர் போட்டு அழகு படுத்தி விட்டு அதற்காக அந்த நிறுவனம் 2 கோடி ரூபாய் வாங்கியுள்ளது. ஆனால் அதற்கு அந்த நிறுவனம் செலவழித்த தொகை வெறும் 12 லட்சம் ரூபாய் தான்.
மேலும் இந்த தொங்கு பாலத்தை 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் எடுத்திருந்த ஓரேவோ குழு நிர்வாகி ஜெய்சுக் படேல் கடந்த அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி பாலம் சீரமைக்கும் பணிகள் முடிந்து விட்டதாகவும், பாலம் திறப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் சீரமைக்கும் பணிகள் 6 மாதத்தில் நடந்து முடித்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ஒப்பந்தம் எடுத்த ஓரேவா குழுமம் பாலத்தை சீரமைக்கும் பணியை மற்றொரு நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
மேலும் பாலத்தை தடய அறிவியல் துறையினர் நடத்திய சோதனையில் சீரமைப்பு பணியின் போது பாலத்தின் அடிப்படை கட்டமைப்பில் சின்ன மாற்றம் கூட அவர்கள் செய்யவில்லை. இந்நிலையில் பாலம் எப்படி உறுதித் தன்மை பரிசோதிக்கப்பட்டது என்று சொன்னால் அது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பாலம் இருக்கும் இடத்திற்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி படேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் பாலத்தில் நடந்து பார்த்துவிட்டு அதன் உறுதி தன்மையை சோதித்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் கடிகாரம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஓரேவா இதுவரை எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு அனுபவமும் இல்லை. ஆனால் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை எடுத்து மற்றொரு நிறுவனத்திற்கு துணை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் துணை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் இந்த பாலத்தை சீரமைக்க செலவிட்ட தொகை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பாலத்துக்கு வர்ணம் பூசுதல், கிரீஸ் அடித்தல் போன்றவை செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.