Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா?…. கறி குழம்பு சமைக்க மறுத்த மனைவி…. 100க்கு டயல் செய்து புகார் கூறிய கணவன்….!!!

தெலுங்கானா மாநிலம் பனகல் மண்டலத்திலுள்ள சேரலா கௌராரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் ஆட்டு இறைச்சியுடன் வீட்டிற்கு வந்து, அதனை தன் மனைவியிடம் கொடுத்து குழம்பு வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து குடிபோதையில் வந்த தன் கணவரின் மீது கோபத்தில் இந்த மனைவி, அதனை சமைத்து கொடுக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார் .இதைத்தொடர்ந்து போதையில் இருந்து நவீன் தனக்கு கறி குழம்பு வைத்து கொடுக்காத மனைவி மீது புகார் செய்வதாக நினைத்து செல்போனில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு டயல் செய்து இதுபற்றி தெரிவித்துள்ளார்.

நவீனின் பேச்சைக் கேட்டு முதலில் காவலர்கள் யாரோ பிராங்க்  செய்கிறார்கள் என நினைத்து அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் அழைப்பை துண்டித்துள்ளனர்.  ஆனால் போதையில் இருந்த நவீன், விடாமல் தொடர்ந்து 6 முறை போன் அடித்து தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து நவீனுக்கு பாடம் புகட்ட நினைத்த காவல்துறையினர், அவரது செல்போன் நம்பரை வைத்து அவரது இருப்பிடத்தை அறிந்து கொண்டுள்ளனர்.

அதையடுத்து அவரது வீட்டுக்கு நேரில் சென்று பார்த்ததில் நவீன் முற்றிலும் குடிபோதையில் இருந்ததால், அவனை தற்சமயம் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். அதன்பின் மறுநாள் வந்த காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, அவர் மீது பிரிவு 290 மற்றும் 510ன் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பாக கனகல் உதவி காவல் ஆய்வாளர் நாகேஷ் கூறியதாவது, பொதுமக்களின் அவசர தேவைக்காக அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை  இதுபோன்று யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |