ரவீந்தர் மகாலட்சுமியிடம் எப்படி ப்ரோபோஸ் செய்தார் என்பது குறித்து கூறியுள்ளார்.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் பேட்டியாக கொடுத்து வருகின்றார்கள். தற்பொழுது இவர்களின் திருமணம் பற்றிய பேச்சுதான் ஹாட் டாப்பிக்காக இணையத்தில் இருக்கின்றது. ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி 2 வருடங்களாக காதலில் வந்தார்கள். முதலில் காதலை ரவீந்தர் தான் சொன்னாராம். ஆனால் ரொமான்டிக்காக எல்லாம் சொல்லவில்லை. திருமதி ரவீந்தர் சந்திரசேகராக இருப்பாயா என மகாலட்சுமிக்கு மெசேஜ் செய்துள்ளார். அதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். இதை அறிந்த ரசிகர்கள் ஒரு லவ் யூ, சாக்லேட் இல்ல இப்படி மெசேஜ் மூலமா செய்வது கேள்வி எழுப்பி உள்ளார்கள். அதை விடுங்க ,எப்படி ப்ரொபோஸ் செய்தால் என்ன ஒர்க் அவுட் ஆகிவிட்டது. நீங்கள் கலக்குங்கள் என கூறி வருகின்றார்கள்.