Categories
உலக செய்திகள்

இப்படியா சட்டம் போடுவீங்க..? ”ரூ. 65,45,625 அபராதம்”…. 5 வருடம் சிறை…. சர்சையில் சிக்கிய பிரான்ஸ்….!!

சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று பிரான்ஸ் நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆண் மருத்துவரை பெண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும், பெண் மருத்துவரை ஆண் நோயாளி பார்க்க விரும்பவில்லை என்றும் கூற இயலாது. அவ்வாறு அவர்கள் கூறினால் ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் 75 ஆயிரம் யூரோக்களை இந்திய மதிப்பில் ரூ. 65,45,625 அபராதமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவர்.

anti-discrimination law  என கூறப்படும் இந்த சட்டத்தின் அடிப்படையில் பெண் நோயாளி ஆண் மருத்துவரை சந்திக்க மறுப்பு தெரிவித்தால் அது பாலினப் பாகுபாடு காட்டுவதாகவே கருதப்படும் என கூறப்படுகிறது.

இந்த புதிய சட்டம் பற்றிய தகவலை பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் அனைத்து மக்களுக்கும் தெரிவித்துள்ளார். ஆனால் சுகாதாரத் துறையின் இணையதளத்தில் ஒவ்வொரு நோயாளிக்கும் தனது மருத்துவரை தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டப்படி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |