Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“இப்படித்தான் பொருட்களை வாங்க வேண்டும்” உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா….மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை…!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து  உலக நுகர்பொருள் உரிமைகள் தின விழா நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன்,வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், துணை இயக்குனர் ராம் கணேஷ்,உதவி ஆணையர் ராஜ்குமார், கல்வி அலுவலர் மணிவண்ணன், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரத்தினவேல்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மங்களநாதன் ,மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி,பாதுகாப்பு கழக பிரதிநிதிகள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நுகர்பொருள் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவில் கொள்வதற்காக ஆண்டுதோறும் நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால்  நுகர்வோர்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களையும்  தரம்,எடை குறைவு,போலியான பொருட்களை வழங்குதல்,விளம்பரத்தை பார்த்து ஏமாறுதல்,போன்ற செயல்களை நுகர்வோர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தரமான பொருட்கள் என்றும்,விலை குறைந்தால் தரமற்ற பொருட்கள் என்ற எண்ணம் நுகர்வோர்களிடம் இருந்து வருகிறது. எனவே  மாணவ மாணவிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனையடுத்து  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டியுள்ளார்.

Categories

Tech |