Categories
சினிமா

இப்படத்தை எங்களுக்காக விட்டு சென்ற எம்.ஜி.ஆர்….. இயக்குனர் மணிரத்னம் பேச்சு….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் வைத்து இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” படத்தை இயக்கி வருகிறார். 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகியது. இந்த படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகிய பல முன்னணி நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இதனிடையில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பொன்னியின் செல்வன் வெளியாகயிருக்கிறது. இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ்நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் பேசியதாவது “நான் கல்லூரி ஆரம்பிக்கும் போது இப்புத்தகத்தை படித்தேன்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் இன்னும் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை. இதற்கிடையில் கல்கிக்கு முதல் நன்றி. இத்திரைப்படம் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படம் ஆகும். நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிக்க வேண்டியதாகும். இருப்பினும் முடியாமல் போனதற்கான காரணம் இன்று தெரிந்தது. அதாவது எங்களுக்காக விட்டு சென்று இருக்கிறார். எவ்வளவுபேர் முயற்சித்து இருக்கிறார்கள். நானும் 1980-களில் இருந்து முயற்சிசெய்து இன்று தான் முடித்திருக்கிறேன். இங்கு இருப்பவர்கள் அனைவராலும் தான் இது சாத்தியமானது. இவர்கள் இல்லையெனில் இது சாத்தியம் இல்லை. அதன்பின் முக்கியமாக ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி” என அவர் பேசினார்.

Categories

Tech |