நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிமுகவிற்கு மாபெரும் தோல்வியை கொடுத்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கோட்டை என பெயர் பெற்ற கொங்கு மண்டலத்திலும் கூட திமுக தன்னுடைய கொடியை நாட்டி விட்டது. அதோடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியையும் ஆக்கிரமித்தது திமுக. சேலம் மாவட்டத்தில் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளை கைப்பற்றி திமுக தனது பெரும்பான்மையை காண்பித்தது. அதிமுகவின் இந்த கடுமையான பின்னடைவுக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
அதாவது தேர்தலுக்கு முந்தைய தினம் வரை மிகவும் உற்சாகத்துடன் ஓடி ஓடி உழைத்த எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவற்றுக்கெல்லாம் முழுமுதல் காரணமாக கூறப்படுவது வசதிபடைத்த வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது தான் என ஒரு சாரார் கூறுகின்றனர். உழைத்த தொண்டர்களை மறந்துவிட்டு பணத்தை பார்த்து வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது தான் தோல்விக்கான முதல் காரணமாக கருதப்படுகிறது. வசதி படைத்தவர்கள் குறிவைத்து வேட்பாளர்களாகியது அதிமுகவின் தோல்விக்கான முக்கிய காரணம் என புறப்படுகிறது.எது எப்படியோ திமுகவின் தோல்வி அதிமுக தலைமைக்கு மாபெரும் பேரிடி என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.