Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மகுட்டைமேடு மற்றும் ராசிபுரம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி அணையினரின் கட்சியின் 51-வது ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தொண்டர்கள், பொதுமக்கள் என பல பேர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடியை தொண்டர்கள் அழைத்து வந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் பாக்கெட்டில் இருந்து பரிசு, ரொக்கம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதேபோன்று பல பேரின் பணமும் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு எடப்பாடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது கட்சியினர் இடையே அதிர்ச்சியையும், பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கட்சித் தொண்டர்கள் பல பேரின் செல்போன்கள் மற்றும் பணம் திருடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக-வின் முக்கிய கட்சி பிரமுகர்கள் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |