சென்னையில் இபிஎஸ் – ஓபிஎஸ்யை சந்தித்த அமித்ஷா தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில கட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனையடுத்து அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை பிப்ரவரி 27 அன்று நடைபெற்றது. இதில் பாமகவிற்கு 23 தொகுதிகள் என்றும் பாஜகவிற்கு 15 தொகுதிகள் என்றும் கொடுக்கப்பட்டது.
ஆனால் பாஜகவினர் இடையே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் குறித்து அதிருப்தி இருந்தது. இந்நிலையில் அமித்ஷா தமிழகத்திற்கு வந்து பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து பிப்ரவரி 28 அன்று அவர் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இப்பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு 15 தொகுதிகள் கொடுத்துள்ளதாக அறிவித்ததற்கு மறுப்பு தெரிவித்த அமித்ஷா தங்களுக்கு 35 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து இபிஎஸ், ஓபிஎஸ் தங்களின் கட்சி நிலைமை எடுத்துக் கூறிய காரணத்தால் தங்களுக்கு 25 இடங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் தங்களுக்கு 25 இடங்கள் கொடுக்கவேண்டும் என்று உறுதிபட இருந்தார். அதுமட்டுமின்றி அமித்ஷா கட்சிகளின் பல பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அமித்ஷா சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்