Categories
அரசியல்

இபிஎஸ்ன் சொந்த மாவட்டத்தில் …. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!!!!!

இபிஎஸ்க்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் சார்பில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை ஏற்க அழைக்கும் படி கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி இடை தேர்தலில் கட்சி சின்னத்தை பெற ஓபிஎஸ் கையெழுத்து போட தயார் என அழைத்ததும் கையெழுத்து போட மறுத்து புரட்சி தலைவரின் இரட்டை இலை சின்னத்தை முடக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனம் என அச்சிடப்பட்ட போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவை மாநகரம் முழுவதும் ஒட்டி இருக்கின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது.மேலும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ்சுக்கு  ஆதரவு இருப்பதாக கருதப்படும் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகள் அதிகமானோர்  சமீபத்திய இபிஎஸ் பக்கம் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இபிஎஸ்சின் சொந்த மாவட்டமான சேலம் அமைந்துள்ள கொங்கு மாவட்டத்தில் அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதாரங்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |