நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அதன்படி அனைத்து முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அவ்வப்போது மத்திய அரசு வெளியிட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இபிஎஃப் கணக்கு என்னுடன் ஆதார் இணைக்க வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி கடைசி நாள் என்று வருங்கால வைப்பு நிதியம் அறிவித்துள்ளது.
அதன்பிறகு ஆதார இணைக்காத சந்தாதாரர்கள் பணம் செலுத்தவும், எடுக்கவும், சலுகை பெறவும் முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள் அனைவரும் தங்களின் யுஏஎன் எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அவகாசம் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
EPFO கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை வீட்டில் இருந்தவாறே இணைப்பது எப்படி?
* முதலில் பிஎப் தளமான Epfindia.gov.in அல்லது நேரடியாக https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற பக்கத்திற்கு செல்லவும்.
*உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.
* மெனுவில் இருக்கும் “Manage” என்பதைக் கிளிக் செய்து, E-KYC போர்ட்டலைக் கிளிக் செய்யவும்.
* KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
* ஆதார் எண் இல்லாத பட்சத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, OTP உருவாக்கப்படும் வரை காத்திருங்கள்.
*உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் நிரப்பி OTP-ஐ சரிபார்க்கவும்.
* உங்கள் ஆதார் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும். ஆதார் தரவுகளுக்குக் கீழ் “Verified” என எழுதப்பட்டு இருக்கும்.