Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டா, மெட்டாவின் போலி கணக்குகள் நீக்கம்…. இனி தப்பிக்க முடியாது…. இந்திய சைபர் நிறுவனம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் யூட்யூப் மற்றும் இன்ஸ்டால் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தங்களைப் பற்றி அனைத்து தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர். அதனால் தற்போது மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் போலி அக்கவுண்டுகள் அதிகரித்து வருவதால் இந்தியாவை சேர்ந்த சைபர் ரூட் ரிஸ்க் அட்வைசரி நிறுவனம் போலி கணக்குகள் குறித்த சோதனையில் ஈடுபட்டது.

அதன் மூலமாக சீனாவில் உள்ள ராணுவ வீரர்கள், ஜனநாயக சார்பு அலுவலர்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கணக்குகளில் இருந்து தகவல்களை திரட்டும் 900 போலி கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளது. மெட்டா மற்றும் இன்ஸ்ட்டாவை சேர்ந்த இந்த கணக்குகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் போலி கணக்குகள் உடனடியாக நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |