Categories
சென்னை மாநில செய்திகள்

“இன்றே கடைசி நாள்”…. மாதாந்திர சீசன் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தினசரி அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மாதாந்திர சலுகை பயணச்சீட்டுகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வகையில் ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த பட்ச சலுகையாக வழங்கப்படும் இந்த மாதாந்திர பயணச்சீட்டுகளை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும். அதன்படி சென்னையில் பணி நிமித்தமாக பேருந்துகளில் பயணம் செய்யும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த பயணச் சீட்டுக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதனைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல லட்சக்கணக்கானவர்கள் இந்த பயணச் சீட்டுகளை வைத்து தினசரி பயணம் மேற்கொள்கிறார்கள். தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தினசரி இரவு நேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் அலுவலகம் செல்பவர்கள் பணி நாட்களில் சென்று மாதாந்திர பயணச்சீட்டுகளை பெற முடியாததால் அவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றுக் கொள்வது வழக்கம்.

ஆனால் கடந்த மூன்று வாரமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் பலரும் மாதாந்திர பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் பயணிகள் சந்திக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜனவரி 24ஆம் தேதி வரை பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதாந்திர சலுகை பயணச்சீட்டுகள் வினியோகம் ஜனவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்றே கடைசி நாள் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |