Categories
தேசிய செய்திகள்

இன்று(29.10.22) 5ஆவது சனிக்கிழமை…. வங்கிகளுக்கு விடுமுறையா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத்திற்குரிய விடுமுறை நாட்கள் பட்டியல்கள் குறித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலையும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டது. பொதுவாகவே அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மாதத்தில் ஐந்தாவது சனிக்கிழமை வந்துள்ளதால் ஐந்தாவது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில் கடந்த 2015 வருடம் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியா முழுவதும் செயல்படும் வங்கிகளுக்கு இரண்டு, நான்காவது சனிக்கிழமை தவிர மற்ற சனிக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படாது அந்த நாட்களில் வங்கியில் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்தாவது சனிக்கிழமை வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது கட்டாயம். எனவே இன்று(5 ஆவது சனிக்கிழமை) இந்தியாவில் அனைத்து வங்கிகளும் வழக்கம் போல செயல்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |