தமிழகத்தில் போதை பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுப்பது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் குட்கா, பான்மசாலா உ உள்ளிட்ட போதைப்பொருட்களை நுழைய விடாமல் தடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், போதைப் பொருட்களுக்கான தடை உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.