Categories
மாநில செய்திகள்

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்.!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் 17 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிமையும் தெரிவித்துள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அதிகபட்சமாக பந்தலூரில் 17 சென்டிமீட்டர், தேவாலாவில் 12, பிரையர் எஸ்டேட் 11, ஹாரிசன் எஸ்டேட் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

Categories

Tech |