கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதே நேரத்தில் மாநில அரசுகள் சூழலுக்கு தகுந்தவாறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் 31ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வாரத்தில் 6 நாட்களும் ஒரு சில தளர்வுகள் இருந்தாலும் இன்று மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். மீறி சென்றால் குற்றவியல் நடைமுறை பிரிவு 144 கீழ் வழக்கு பதிவு செய்வதோடு உங்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது.