ஜனவரி 1ஆம் தேதி இன்று முதல் டோக்கனைசேஷன் என்று புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்ய உள்ளது.
நாட்டின் சிறந்த நிதிநிலைக்காக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் டோக்கனைசேஷன் என்ற ஒரு புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்கவும், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் போன்ற பயன்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு விதிமுறைகளை அறிமுகம் செய்து வருகின்றது.
அதில் இந்த டோக்கனைசேஷன் விதியும் ஒன்று. டோக்கனைசேஷன் என்பது ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுவதாகும். இதன்படி ஒவ்வொருவருக்கும் ஒரு டோக்கன் வழங்கப்படும். இதில் கார்டு விவரம் என்கிரிப்ட் செய்யப்படும், மேலும், கார்ட் எண், cvv உள்ளிட்ட எந்த விவரமும் மூன்றாம் தரப்பு செயலிக்கு தெரியவராது. இது உங்கள் கார்ட்களுக்கு பதிலாக கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் டோக்கன் எண்ணை உள்ளிட்டால் போதும். இந்த நடைமுறை ஜனவரி 1ம் தேதி இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.