Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, வட தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி உங்களுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |