ஒவ்வொரு வருடமும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபல பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவிலில் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இதனையடுத்து தற்போது குறைந்துள்ளதால் இந்த வருடம் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கு எக்கச்சக்கமான பக்தர்கள் வருவார்கள் என்ற காரணத்தினால் தூத்துகுடி மாவட்டத்திற்கு மட்டும் இன்று காலை முதல் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .பள்ளி மற்றும் கல்லூரி வாகன மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.