Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு தடை…. பக்தர்களுக்கு அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டி ருப்பதாக  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவணிமாத திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதாக கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஆவணி திருவிழா ஆகம விதிப்படி பக்தர்கள் இல்லாமல் கோவில் பணியாளர்கள் மூலமாக நடைபெறும். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆவணித்திருவிழா நிகழ்வுகளை யூடியூப் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |