கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவல் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொருளாதார ரீதியாக பல நாடுகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனாவை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்தது .இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள். இந்த நிலையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
சீனாவில் வேகமாகப் பரவும் BF.7 வகை கொரோனா தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு விமான பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் அதில், சீனா, ஹாங்காங்கில் இருந்து வருவோருக்கு இன்று முதல் விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.